
வாரிசு இசை வெளியீடு: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்
இந்த விழாவில் எப்படியாவது அனுமதிச் சீட்டு வாங்கி கலந்து கொள்ள வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலரும் முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், ஒரு மாவட்டத்திற்கு வெறும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்று ரசிகர் மன்றத்தில் சொல்லிவிட்டார்களாம். சரி, நேரிலாவது வர முடியவில்லை, அப்போதே உடனுக்குடன் "யு டியூப் லைவ்" மூலம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டவர்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைக்கும் எனத் தெரிகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்களாம். 2023 புத்தாண்டு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் திட்டம் உள்ளதாம். அதனால், "வாரிசு" இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒரு வாரம் கழித்து மட்டுமே பார்க்க வேண்டிய சூழ்நிலை விஜய் ரசிகர்களுக்கு. நிகழ்ச்சியை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்களின் கணக்குகளை முடக்கவும் திட்டம் வைத்துள்ளார்களாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!