
ஆண்டிறுதியில் ஐஸ்வர்யாவுக்கு ‛டபுள் ஆறுதல்
இதுதவிர புலிமடா, அஜயிண்ட ரெண்டாம் மோசனம் என்ற மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழ் இந்தியில் தயாராகும் மாணிக் படத்தில் நடித்து வருகிறார். இதுவல்லாமல் துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் படங்கள் கிடப்பில் கிடக்கிறது. இத்தனை படங்கள் இருந்தும் இந்த ஆண்டு இதுவரை ஒரு படங்கள் கூட வெளிவரவில்லை.
இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆண்டு இறுதியில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் படங்கள் வெளிவருகிறது. இரண்டு படங்களுமே பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். தி கிரேட் இண்டியன் கிச்சன் மலையாளத்தில் வெளிவந்த படத்தின் ரீமேக், ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார். டிரைவர் ஜமுனா, வத்திகுச்சி படத்தை இயக்கிய கிங்ஸ்லி இயக்கிய படம். இரண்டுமே ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள். தி கிரேட் இண்டியன் கிச்சன் வருகிற 29ம் தேதியும், டிரைவர் ஜமுனா 30ம் தேதியும் வெளிவருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!