
பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்
டிச 20, 2022
Advertisement
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ , அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் அட்லீக்கும், நடிகை பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் அட்லீ. இந்த நிலையில் பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அட்லீ மற்றும் பிரியாவை வாழ்த்தியுள்ளார். அதோடு அவர்களுக்கு பரிசு ஒன்றையும் கொடுத்து அசத்தினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!