
கமல் படம் : உதயநிதிக்கு பதில் விஜய் சேதுபதி
டிச 20, 2022
Advertisement
ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, மனிதன், சைக்கோ உள்பட பல படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாமன்னன் படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சராகிவிட்ட உதயநிதி இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார். இதனால் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்தும் அவர் விலகிவிட்டார். இந்நிலையில் உதயநிதி நடிக்க இருந்த வேடத்தில் இப்போது விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்து கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!