
பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த சரத்குமார்
இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இந்த படத்தில் தற்போது சரத்குமார் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள கதாபாத்திரம் அவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனைவரும் ஒருசேர விரும்பியதால் சரத்குமாரை அழைத்து இதில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பாலகிருஷ்ணா தற்போது கோபிசந்த் மாலினேனி டைரக்சனில் நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும், சரத்குமார் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வரும் சங்கராந்தி பண்டிகையில் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!