
அவதார் 2 - முதல் வார இறுதியில் 100 கோடியைக் கடந்த வசூல்
முதல் நாளிலேயே முன்னணி நடிகர்களின் படங்களைப் போல அதிகாலை காட்சிகள் மட்டுமல்ல நள்ளிரவு 12 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. முதல் வார இறுதி வசூலாக இந்தப் படம் 100 கோடியைக் கடந்து 130 கோடி வசூலை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதி வசூலாக "அவெஞ்சர்ஸ் என்ட்கேம்" படம் வசூலித்த 155 கோடி வசூலை "அவதார் 2" வசூல் முறியடிக்கவில்லை என்பது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருவதால்தான் அந்த வசூல் பாதிப்பு என்கிறார்கள். இந்த வார நாட்களில் படம் தாக்குப் பிடித்துவிட்டால் இந்த வார இறுதி, அடுத்த வாரம் அரையாண்டு விடுமுறை என வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!