
அவதார் 2 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்
தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் "அவதார் 2" படத்தை வெளியிடுகின்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் நடக்கும். அது போல "அவதார் 2" படத்திற்கும் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அவற்றிற்கான முன்பதிவும், மற்ற காட்சிகள், நாட்களுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை "அவதார் 2" படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே, அப்படம் வெளியாகும் நாளில் முக்கிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. "கட்சிக்காரன், 181" என்ற இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
"அவதார் 2" படம் நன்றாக இருந்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டால் அடுத்த வாரம் டிசம்பர் 23ம் தேதியும் அதிகப் படங்கள் வர வாய்ப்பிருக்காது. டிசம்பர் 22ம் தேதி விஷால் நடிக்கும் "லத்தி" படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. "அவதார் 2" வரவேற்பைப் பொறுத்து மற்ற படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்படலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!