
சந்திரமுகி 2 - தமிழில் மூன்றாவது முறையாக முயற்சிக்கும் கங்கனா ரணவத்
ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த "தாம் தூம்" படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் யாரும் கவனிக்கவில்லை. அதே வருடத்தில் ஹிந்தியில் வெளிவந்த "பேஷன்" படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்ட "தலைவி" படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் மூன்றாவது முறையாக "சந்திரமுகி 2" படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலிரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் "சந்திரமுகி 2" கங்கனாவுக்கு கவனம் ஈர்க்கும் படமாக அமையுமா என்பது படம் வெளிவரும் போது தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!