
லவ் டுடே வெற்றி எதிர்பார்த்ததுதான்: பிரதீப் ரங்கநாதன்
நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: இந்த படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்தது. டிரைலர் வெளியான பிறகு படம் நல்லா இருக்கும் என அனைவரும் நம்பினார்கள். அதனால் எங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது.
படத்தின் விமர்சனங்கள் லவ் டுடேவை இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. கோமாளி படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்தது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன். மக்கள் ஆதரிக்கக்கூடிய படங்களை உருவாக்க முயற்சிப்பேன். இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!