
டிரென்டிங் போட்டியில் தீ தளபதி…., மற்றும் சில்லா..சில்லா..
"வாரிசு" படத்தின் முதல் சிங்கிள் "ரஞ்சிதமே" ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவந்து 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. அதற்கடுத்து இரண்டாவது சிங்கிளான "தீ தளபதி.." பாடல் ஒரு வாரம் முன்னதாக வெளியாகி 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதுவும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. யு டியூப் மியூசிக் டிரென்டிங்கில் இப்பாடல் தற்போது 2ம் இடத்தில் உள்ளது.
அதே சமயம், அஜித் நடித்துள்ள "துணிவு" படத்தின் முதல் சிங்கிளாக இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்த "சில்லா சில்லா" பாடல் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் மியூசிக் டிரென்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. "தீ தளபதி, சில்லா சில்லா" பாடல்களுக்கிடையே தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. "வாரிசு" பாடல்களின் சாதனையை "துணிவு" பாடல்கள் மிஞ்சுமா என்று இரண்டு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
பாடல்களை விடவும், இரண்டு படங்களின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் போது இந்தப் போட்டி இன்னும் அதிகமாகவே இருக்கும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!