
தள்ளாடும் டிசம்பர் 9 ரிலீஸ் படங்கள்
மறு வெளியீட்டுப் படமான "பாபா" படத்திற்காவது சில பல லட்சங்கள் நேற்றைய முதல் நாள் வசூலாகக் கிடைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 9ம் தேதி வெளிவந்த புதிய படங்கள் அனைத்துமே வசூலில் தள்ளாடி வருவதாகச் சொல்கிறார்கள். படம் வெளியான தினத்தில் "மாண்டஸ்" புயலின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ததால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவேயில்லை. நேற்று மட்டும் சில காட்சிகளுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும் முன்பதிவுகள் மிகவும் மோசமாகவே உள்ளன. இந்த மழை, குளிரில் எதற்காக வெளியில் செல்ல வேண்டும் என பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். நாளை வெயில் வந்தால் அதன் பிறகுதான் மக்கள் வெளியில் செல்வார்கள் போலிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் ஏமாற்றியதால் வரும் வார நாட்களிலும் குறிப்பிட்ட அளவு வசூல் கிடைப்பதும் சந்தேம் என்றே தெரிவிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!