
2023ல் தெலுங்கிலிருந்து மட்டும் 10 பான் இந்தியா படங்கள்
அதற்குப் பிறகு தெலுங்கிலிருந்தும், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்தும் சில பல பான் இந்தியா படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் மட்டும் பான் இந்தியா படமாக வெளியான தமிழ்ப் படமான "பொன்னியின் செல்வன்", தெலுங்குப் படமான "ஆர்ஆர்ஆர்", கன்னடப் படங்களான "கேஜிஎப் 2, காந்தாரா" ஆகிய படங்கள் மட்டுமே சுமார் 3000 கோடி வசூலைப் பெற்றிருக்கின்றன.
அடுத்த வருடத்திலும் தென்னிந்திய மொழிகளிலிருந்து பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் தெலுங்கிலிருந்து மட்டுமே சுமார் 10 பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. பிரபாஸ் நடிக்கும் "ஆதிபுருஷ், சலார்", பவன் கல்யாண் நடிக்கும் "ஹரிஹர வீர மல்லு", ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம், என்டிஆர் நடிப்பில் கொராட்டலா சிவா இயக்கும் படம், அல்லு அர்ஜுனின் "புஷ்பா" இரண்டாம் பாகம், பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கும் படம், நானி நடிக்கும் "தசரா", அகில் நடிக்கும் "ஏஜென்ட்", பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிக்கும் "ஹனு மான்" என இந்த 10 படங்களையும் பான் இந்தியா வெளியீடாக வெளியிட உள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!