ஆர்யா நடிக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
Advertisement
Advertisement
ஆர்யா நடிக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
டிச 10, 2022
அ நிறம் | அளவு
Advertisement
விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் முத்தையா, ஆர்யாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது . தற்போது இந்த படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என தலைப்பு வைத்துள்ளனர். ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையும் வெளியாகி வைரலாகி வருகிறது .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!