
டிச., 24ல் ‛மாவீரன் முதல் பாடல் வெளியாகிறது
டிச 10, 2022
Advertisement
டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 2023ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் மாவீரன் படத்தின் முதல்பாடலை கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டமாக டிசம்பர் 24ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!