
20 ஆண்டுகளுக்கு பின் வெளியான பாபா : ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
தற்போது தமிழகத்தில் மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் இருந்தபோதும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு கூடி பட்டாசு வெடித்து தாரை தப்பட்டம் முழங்க, பாபா படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏற்கனவே திரைக்கு வந்த படமாக பாபா இருந்த போதும் புதிய படங்களுக்கு கொடுப்பது போன்ற வரவேற்பை ரஜினி ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.
இதேபோல் 2007ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான சிவாஜி படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ள சிவாஜி படம் டிசம்பர் 15ம் தேதி வரை திரையிடப்படுகிறது. ஒரேசமயத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!