
தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆன காதல் தேசம்
ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் நண்பர்களாக மாறும் வினீத், அப்பாஸ் இருவரும் தபுவை காதலிக்கின்றனர். இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது தெரியவரும்போது அதன்பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் ஒரு வரிக்கதை. படத்தின் கதையோடு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. ‛‛ஹலோ டாக்டர் ஹார்ட் வீக் டாக்டர், என்னை காணவில்லையே நேற்றோடு"" போன்ற பாடல்களுடன் ‛முஸ்தபா முஸ்தபா" என்ற நண்பர்கள் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. தலைமுறைகளை தாண்டி இன்றும் இந்த பாடல் பிரபலமாக திகழ்கிறது.
கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இந்த படம் ஆந்திரா, தெலுங்கானவில் இன்று 200க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!