
வாரிசு நாயகி ராஷ்மிகாவின் இரண்டு போட்டோ, இரண்டு நாட்களில் 27 லட்சம் லைக்ஸ்
அடுத்து விஜய் ஜோடியாக "வாரிசு" படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் பொங்கலுக்கு இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர் ராஷ்மிகா. அவரது தளத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதுமே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளம்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் ஹிந்தியில் நடித்து வெளிவந்த "குட்பை" படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவலுடன் இரண்டே இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு 27 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. கன்னட சினிமாவில் ராஷ்மிகா மீது பலரும் தங்களது வெறுப்புகளைக் காட்டி வரும் நிலையில் அவருக்குக் கிடைத்து வரும் இத்தனை லட்சம் லைக்குகள் அவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆதரவை நிரூபிப்பதாகவே உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!