
‛வெண்ணிலா கபடி குழு ஹரி வைரவன் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற விஷ்ணு விஷால்
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில் ஹரி வைரவன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சில ஆண்டுகள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 3ம் தேதி மரணம் அடைந்தார். திரையுலகில் அவர் விஷ்ணு விஷாலுடன் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார். அவ்வப்போது அவர் உதவிகளும் செய்து வந்தார். தற்போது ஹரி வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அவரது மனைவியிடம் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும்போது. “மறைந்த நடிகர் வைரவன் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தேன். அவர் மனைவியிடம், உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளித்தேன்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!