
வாரிசு படத்தின் தீ தளபதி பாடலை பாடிய சிம்பு… வெளியான புதிய அப்டேட்…
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் பாடிய இந்தப்படத்தின் முதல் பாடலான "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‛தீ தளபதி" எனும் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .மேலும் சிம்புவுடன் இசைஅமைப்பாளர் தமன் மற்றும் இயக்குனர் வம்சி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!