
சிந்தி முறைப்படி நாளை ஹன்சிகா திருமணம்
திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான "சங்கீத்" நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை ஹன்சிகா செய்திருந்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மணமகன் சோஹைல் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்று இரவு திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருக்கும் திருமண ஜோடி பின்னர் மும்பை வர உள்ளார்களாம். அங்கு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!