
புகழ் அன்பை மட்டுமல்ல கஷ்டங்களையும் கொடுக்கிறது - விஜய் தேவரகொண்டா
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்திற்காக கருப்பு பணம் செலவு செய்யப்பட்டதாக கூறி வழக்கும் தொடரப்பட்டது. குறிப்பாக இந்த படத்திற்கான பணம் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு, பின்னர் துபாயிலிருந்து மீண்டும் இங்கே திருப்பி அனுப்பப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பட தயாரிப்பாளர்கள் மற்றும் இந்த படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு இதுபற்றி விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே சார்மி, பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார் விஜய் தேவரகொண்டா. அவரிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிந்து வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‛‛அதிகாரிகள் கேட்ட சில கேள்விகளுக்கு நான் விடை அளித்து உள்ளேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்துள்ளார்கள்.. அதேசமயம் அவர்கள் என்னை மீண்டும் வரவேண்டும் என கூறவில்லை.. புகழ் என்பது அன்பை மட்டும் கொண்டுவராது, சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது.. இது வாழ்க்கையில் எனக்கு ஒரு அனுபவம்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!