
‛தேன் இயக்குனரின் அடுத்த படம் அறிவிப்பு
இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் தனது அடுத்து படம் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட திரைப்பட வல்லுர்களிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள். இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!