
ஏ.ஆர்.ரஹ்மானின் லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த்
விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து ரஜினி படம் பார்க்கும் போட்டோவை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
ரஹ்மானின் மனைவி சாய்ரா கூறிய ஒன் லைனை வைத்து திரைக்கதை அமைத்து படமாக இயக்கி உள்ளார் ரஹ்மான். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக உள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க இறங்குகிறார். அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி ஜூலியட் அடையாளம் காண்கிறார் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!