
முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி?
"என்னுடைய வாழ்க்கையை சினிமாவாக நடிக்க சிலர் முன்வந்தார்கள். நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியே எடுத்தாலும் அதில் நான் நடிக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார் சித்தாராமய்யா.
ஆனாலும் சித்தாராமய்யாவின் நண்பரும், தயாரிப்பாளருமான சிவராஜ் தங்கடகி முழுமூச்சாக இந்த முயற்சியில் இறங்கி உள்ளார். அதோடு சித்தாராமையாவாக நடிக்க அவரைப்போன்ற சாயலும் உடல் அமைப்பும் கொண்ட விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவராஜ் கூறியிருப்பதாவது: "தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதுகுறித்து அவர் பேசுவதைத் தள்ளி வைத்திருக்கிறோம். ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் நாங்கள் மீண்டும் இது குறித்து பேசவுள்ளோம்” என்றார்.
ஜெயலலிதாவாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கங்கனா நடித்ததும், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக கேரளாவை சேர்ந்த மம்முட்டி நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!