
இன்னும் தேதியை அறிவிக்காமல் விளம்பரத்தில் இறங்கிய வாரிசு, துணிவு
"துணிவு" படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் "வாரிசு" படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது. இரண்டு படங்களும் சம அளவில் வெளியாகும் என ஒரு பேட்டியில் உதயநிதியே சொன்னாலும் அதை விஜய் ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லை.
இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் எந்தத் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. "துணிவு" படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. அதை சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். அதையடுத்து "வாரிசு" படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் வெளியிட்டது.
தியேட்டர்கள் புக்கிங் முழுவதுமாக முடிந்த பிறகு தான் இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒரே நாளில் இரண்டு படங்களும் வருமா அல்லது ஏதாவது ஒரு படம் ஒரு நாள் முன்னதாக வெளியாகுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!