
வாரிசு - ரஞ்சிதமே… தெலுங்குப் பாடல் நாளை வெளியீடு
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கான "ரஞ்சிதமே…." தெலுங்குப் பாடல் நாளை நவம்பர் 30 காலை 9 :09 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கில் ராமஜோகையா சாஸ்திரி இப்பாடலை எழுத அனுராக் குல்கர்னி, மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.
தமிழில் இப்பாடல் ஹிட்டானதைப் போல தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தனது குடும்பத்தினருடன் லண்டனில் உள்ள மாமியார் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாட விஜய் செல்ல உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!