
சினிமாவுக்கு வந்த சந்திரபாபு பேரன்
சாரத்தின் நண்பர்களாக ‛முருகா" அசோக், ‛நாடோடிகள்" பரணி, ‛மாரி" வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சாரத் கூறியதாவது: தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே தெற்கத்தி வீரன் கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது. இன்றும் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!