
லவ் டுடே பிரதீப்புக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்
விஜய் நடிக்கும் "வாரிசு", தனுஷ் நடிக்கும் "வாத்தி" ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள்தான். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகும் "ஆர்சி 15", வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் "கஸ்டடி" ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான "லவ் டுடே" படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!