
ரஷ்ய மொழியில் வெளியாகும் புஷ்பா
இப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். படத்திற்கான பிரிமீயர் காட்சிகள், டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ரஷ்யாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மொழித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"பாகுபலி" படத்திற்குப் பிறகு தெலுங்கு மொழிப் படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளன. "புஷ்பா, ஆர்ஆர்ஆர்" ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான படங்கள் தெலுங்கில் தயாராகி வருகின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!