
தெலுங்கு இயக்குனருடன் தனுஷ் இணையும் புதிய படம் ஆரம்பம்
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேட்ன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அடுத்து தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. படத்தின் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தெலுங்கில் "டாலர் டிரீம்ஸ், ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, பிடா, லவ் ஸ்டோரி" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. மாறுபட்ட படங்களைக் கொடுப்பவர் என்று பெயரெடுத்தவர். சேகர் கம்முலா, தனுஷ் கூட்டணி புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!