
சினிமாவில் 13 ஆண்டுகள்.... நன்றி தெரிவித்த யோகிபாபு
அவர் கூறுகையில், ‛‛இன்று ‛யோகி" படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. என்னை பெரிய திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பெரிய திரைக்கு வருவதற்கு முன் சின்னதிரையில் 6 ஆண்டுகள் எனக்கு பெரும் துணையாக இருந்த ராம் பாலா மற்றும் அனைவருக்கும் நன்றி. தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற லவ் டுடே படம் தெலுங்கிலும் பெரும் வெற்றி அடைந்துள்ளது. விரைவில் பிரபாஸ் படத்தில் நடிக்க உள்ளேன். சினிமாவில் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த திரைத்துறையினர், ரசிகர்கள், குடும்பத்தினர், அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!