
கருத்து வேறுபாடு மறந்து மனைவியுடன் ஒன்றாக படம் பார்த்த பாலா
சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்த பாலா கடந்த 2021 செப்டம்பரில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து நடிகர் பாலாவே தனது மனவருத்தத்தை வெளிப்படையாக கூறியிருந்தார். அதே சமயம் தனது இரண்டாவது மனைவி எலிசபெத் குறித்து விமர்சித்தவர்களுக்கு அவரை விமர்சிக்க வேண்டாம் அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கணவன் மனைவி இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக திரைப்படம் பார்க்க வந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாலா தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள சபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தில் நாயகன் உன்னி முகுந்தனின் நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லூசிபர் படத்தை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் இது. இந்த படத்தை பார்ப்பதற்காக தனது மனைவி எலிசபெத்துடன் இவர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!