
பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாகசைதன்யா டேட்டிங்கா - உண்மை என்ன?
இப்படியான நிலையில் தற்போது சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்வதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தின் போது இருவரும் எடுத்த போட்டோ என்று சமூகவலைதளத்தில் ஒரு போட்டோ வைரலானது.
ஆனால் இந்த போட்டோ உண்மையில்லை. சில விஷமிகள் இருவரின் தனித்தனி போட்டோவை எடிட் செய்து இப்படி ஒன்றாக இருப்பது போன்று செய்துள்ளனர். அதை சுட்டிக்காட்டும் விதமாக படத்தில் இருவருக்கும் பின்னால் உள்ள சுவர்கள், தரைத்தளம் ஆகியவற்றை குறிப்பிட்டு இது போலியான படம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!