
அஞ்சலியின் வெப் தொடர் டிச., 9ல் வெளியாகிறது
அஞ்சலி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுகிறார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் சில மாதங்களுக்கு பிறகு நினைவு திரும்புகிறார். அவருக்கு கடைசி 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் மறந்து விடுகிறது. தான் தற்கொலை செய்ய முயற்சித்தோமா, அல்லது தன்னை யாரும் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது அவருக்கு தெரியவில்லை. இதனை அவர் கண்டுபிடிப்பதே படத்தின் கதை. இது "வெர்டிஜ்" என்ற தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இது வருகிற டிசம்பர் 9ம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!