
கிரேட் கமல்ஹாசன் - குல்ஷன் குரோவர் புகழாரம்
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் "இந்தியன் 2" படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன் என வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். நேற்று கமல்ஹாசனுடன் நடிப்பது பற்றி, “தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது” எனக் குறிப்பிட்டு கமல்ஹாசனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
"இந்தியன் 2" படத்தில் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்து வருகிறது. தமிழிலிருந்து மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 2023ம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியாகலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!