
அதிகாரம் கைவிடப்படவில்லை
தயாரிப்பாளர் கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். வேறு சில படங்களை தயாரிக்கிறார். வெற்றி மாறன் விடுதலை, வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறார். துரை செந்தில்குமார் சமீபத்தில் நயன்தாராவின் 81வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரம் படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இதனை தயாரிப்பாளர் கதிரேசன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “அதிகாரம் கைவிடப்பட்டதாக பரவும் வதந்திகளைக் நாங்கள் கவனித்தோம் அது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் மற்றும் படப்பிடிப்புத் நடத்த திட்டங்கள் சுமூகமாக நடந்து வருகிறது என நாங்கள் உறுதியாக இதை அறிவிக்கிறோம்”என்று தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டல் அறையில் கதை விவாதத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!