
விடுதலை படமும் என்கவுன்டர் கதைக்களமா? - வெற்றிமாறன் சொன்ன பதில்
மேலும் வெற்றி மாறன் தனது படங்களில் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட கதைகளை தொடர்ந்து படமாக்குவது குறித்து கூறுகையில், காவல் துறையில் உள்ள குறைகளை மட்டும் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. பொதுவாக மக்கள் மீது ஒரு அமைப்பு ரீதியாக ஒடுக்கு முறைகளை அதிகம் நடத்துவது காவல்துறைதான். ஆகையால் தான் என் படங்களில் அது குறித்த விஷயங்களை அதிகமாக சொல்லி வருகிறேன்.
விசாரணை படத்தில் காவல்துறையின் அடக்குமுறைகள் தான் முழுக்க முழுக்க இடம் பெற்றிருந்தது. அதேபோல் இந்த விடுதலை படமும் காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற படங்களில் சொல்லப்படாத பல புதிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள வெற்றிமாறன், இந்த விடுதலைப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!