
கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர்: நடிகர் விஜய்க்கு அபராதம்
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக அவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பனையூரில் ரசிகர்களை சந்தித்த பிறகு புறப்பட்ட விஜய்யின் காரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், விஜய் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!