
ஜெயிலர் படப்பிடிப்பில் சிவராஜ்குமாரை சந்தித்த சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிவராஜ்குமாரை சந்தித்து அவர் தமிழில் நடிப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன. இந்த நிகழ்வின்போது ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுவும் உடன் இருந்தார்.
இந்த படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்காகத்தான் இந்த படப்பிடிப்பிற்கு வந்து இருக்கிறாரோ என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் வந்தது நடிகர் சிவராஜ்குமாரை பார்ப்பதற்காக தான். காரணம் கடந்த 2015ல் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்போதிருந்தே அவருடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் சிவராஜ்குமாரின் தம்பி புனித் ராஜ்குமார் மரணத்திற்கு கூட பெங்களூரு சென்று அவரது சமாதியில் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!