
பூரி ஜெகன்நாத்-சார்மியிடம் அமலாக்க துறையினர் 12மணி நேரம் விசாரணை
இந்த நிலையில் அமலாக்க துறையினர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி இருவரையும் அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். லைகர் படத்தை தயாரிக்க செலவு செய்யப்பட்ட பணம் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு மீண்டும் அங்கிருந்து இங்கே திருப்பி அனுப்பி படம் தொடர்பான செலவுகளுக்கு கருப்பு பணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரிப்பதற்காகத்தான் இவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2001ம் வருடம் தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இவர்கள் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!