
ஹிப் ஹாப் ஆதியின் புதிய படம் அறிவிப்பு
இந்த நிலையில் ஆதியின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். ஆதியே இசையும் அமைக்கிறார்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!