
பெற்றோரும் அதையேதான் கேட்குறாங்க: ரகுல் ப்ரீத் சிங்
பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் சமீபத்தில், 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இதுபற்றி உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஹிந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங்கிடம் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர், ‛அதை என்னை பெத்தவங்க கிட்ட தான் கேட்கணும்.. அவங்களும் அதையேதான் கேட்கிறாங்க.." என பதிலளித்தார்.
ஜாக்கி பக்னானி தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான "மோகினி" படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!