
பிரதீப் ரங்கநாதனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
2கே கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 4ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 7 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 30 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்நிலையில் லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த போட்டோவை பகிர்ந்து பிரதீப் கூறுகையில், ‛‛நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் காதல். என்ன ஒரு ஆளுமை. லவ் டுடே பார்த்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்"" என மகிழ்ச்சியுடன் பதிவுட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!