
வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போது..?
இந்தப்படத்தின் முதல் பாடலான "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட்டானது . இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். தமன் இசையமைத்திருக்கிறார். பொதுவாக விஜயின் படங்கள் வெளியாகிறது என்றாலே இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் விஜய் பேசும் பேச்சு. "பீஸ்ட்" படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் "வாரிசு" படத்தின் இசை வெளியீட்டுவிழா எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், "வாரிசு" படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!