மம்முட்டி - ஜோதிகா படப்பிடிப்பில் பிரியாணி சமைத்து அசத்திய சூர்யா
நவ 10, 2022
Advertisement
செலக்டிவ் ஆக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் "காதல் ; தி கோர்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜோதிகா. விமர்சனரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜியோ பேபி இயக்குகிறார். அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா திடீர் விசிட் அடித்துள்ளார். அதுமட்டுமல்ல படக்குழுவினருக்கு தனது கையாலே பிரியாணி சமைத்து கொடுத்து அவர்களை அசத்தியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சூர்யா பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!