
தமிழகத்தில், சம அளவில் வாரிசு, துணிவு ரிலீஸ்
அஜித் நடித்துள்ள "துணிவு" படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக உரிமையை வாங்கியுள்ளது. அதனால், விஜய் நடித்து வெளிவரும் "வாரிசு" படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. "வாரிசு" படத்தை உதயநிதி வாங்கவில்லை என்றாலும் அவருடைய கம்பெனிதான் அப்படத்தை தமிழகத்தில் பெயர் இல்லாமல் வெளியிட உள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் "வாரிசு, துணிவு" இரண்டு படங்களுமே தமிழகத்தில் சம அளவிலான தியேட்டர்களில் வெளியாகும் என உதயநிதி தெரிவித்துள்ளார். "துணிவு" படத்தை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே வாங்கிவிட்டதாகவும் தீபாவளிக்குப் பிறகு அறிவிக்கலாம் என இருந்ததாகவும் மேலும் கூறியுள்ளார். "வலிமை" படத்தையும் எங்கள் கம்பெனி பெயர் இல்லாமல் சில ஏரியாக்களில் வினியோகித்தோம் என்றும் அந்தப் பேட்டியில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விஷயத்தில் இனி விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. படத்தின் தரத்தைப் பொறுத்து அப்போது வசூல் நிலவரம் இருக்கப் போகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!