‛பொல்லாதவன் கொண்டாட்டம் : பார்ட் 2 கேட்கும் நாயகி
நவ 09, 2022
Advertisement
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நாயகியாக நடித்திருந்தார். சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, இயக்குனர் வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் குமார், டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை திவ்யா ஸ்பந்தனா இந்த புகைப்படங்களை வெளியிட்டு, ‛‛15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் ‛பொல்லாதவன் 2" படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்"" என பதிவிட்டுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!