
கவிதாலயா தயாரிப்பில் நடிகர் உதய் மகேஷ் டைரக்சனில் ஜிவி பிரகாஷ்
இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வெப்சீரிஸ் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது கவிதாலயா நிறுவனம். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் திரையுலகம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி உள்ள கவிதாலயா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கான இன்று இந்த படம் துவக்க விழா பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான உதய் மகேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நட்டி நட்ராஜ் நடித்த நாளை மற்றும் சக்கர வியூகம் ஆகிய படங்களை உதயபானு மகேஸ்வரன் என்கிற பெயரில் இயக்கியவர். அதன்பிறகு நடிகராக மாறி இது நம்ம ஆளு, கபாலி, இமைக்கா நொடிகள், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இந்தநிலையில் இந்த படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பியுள்ளார் உதய் மகேஷ்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனாஸ்வர ராஜன் நடிக்கிறார்.. ஒரு முக்கிய வேடத்தில் டேனியல் போப் நடிக்கிறார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்த ஹேசம் அப்துல் வகாப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாள நடிகையான இவர் திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவர வேண்டி உள்ளது. தற்போது ஜிவி பிரகாஷ் ஜோடியாகி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!