இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய பாபி சிம்ஹா
Advertisement
Advertisement
இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய பாபி சிம்ஹா
நவ 07, 2022
அ நிறம் | அளவு
Advertisement
நேரம், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இதில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வில்லனாக நடித்த ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்றார் பாபி சிம்ஹா. இந்த நிலையில் தற்போது ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் பரவலாக நடித்த வருகிறார். மேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்- 2 படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி சிம்ஹா நேற்று தனது 38 வது பிறந்த நாளை இந்தியன் -2 படக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!