
35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‛நாயகன் கூட்டணி: கமல்ஹாசன் - மணிரத்னம் படம் அறிவிப்பு
அதன்படி, இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன், துணிவு பட இயக்குனர் எச்.வினோத் ஆகியோரின் படங்களில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், மணிரத்னம் படம் குறித்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த கூட்டணி 35 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் இணைந்திருந்தது. இது இன்றளவும் பேசப்பட்டு வரும் நிலையில், அதே கூட்டணி இணைய இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!